2015ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் சாத்தியம் : கெஹலிய ரம்புக்வெல்ல!!

1556

Rambukwalla

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இன்று உரையாற்றினார். சாஸ்திரிகள் பல திகதிகளை குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி அதில் உகந்த திகதியை தீர்மானிப்பார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதியே முடிவடைகிறது. எனவே அதற்கு பின்னுள்ள திகதியிலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வாய்ப்புண்டு என்று அமைச்சர் தெரிவித்தார்.