அதிகாலையில் கோர விபத்து.. மகள் பலி – தாய் படுகாயம்!!

1777

பண்டாரகமவில்..

பண்டாரகமவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வயதான சிறுமி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ வாகனம் மோதியதில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சிறுமியின் தாய் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளராக சிறுமியின் தாய் பணியாற்றி வருகிறார்.

அலுவலகத்திற்கு சிறுமியுடன் தாய் சென்று கொண்டிருந்த போது இராணுவ வாகனத்தில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறையில் இருந்து இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற இராணுவ பேருந்தே இவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமியையும் அவரது தாயையும் உடனடியாக பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.