ஃபேஸ்புக் நேரலையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

927

ஐதாரபாத்தில்..

அத்தனை வருஷங்கள் பாசமாக வளர்த்த அம்மா, அப்பாவை எதிர்த்து, காதலிச்சவன் நல்லா பார்த்துப்பான்னு நெனைச்சு தான் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிக்கறாங்க. அப்படி காதலிச்சு கரம் பிடிச்சவனே வேறொரு பெண்ணுடன் தொடர்பு வெச்சிருந்தால் பெண் மனசு சுக்குநூறாய் உடைந்து தானே போகும்?

ஆனால், பல இடங்களில் பெண்கள் இப்படி இருந்தாலும், சிலர் தைரியமாக அவன் முன்பு கெத்தாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் முன்னேறுகிறார்கள். தற்கொலை என்பது தீர்வாகாது. அது, ஏமாற்றுபவர்களை மேலும் அடுத்தவர்களை ஏமாற்றவே வழி வகுக்கும்.

எத்தனைக் கனவுகளுடன் பெற்றோரை எதிர்த்து, காதலித்தவனைக் கல்யாணம் செய்திருப்பார் சனா. இன்று பரிதாபமாக உயிரை இழந்துள்ளார். ஐதாரபாத் நகரில் உள்ள புகழ் பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் சனா கான் (32).

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு சனாவுக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், ஹேமந்த்தின் பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

சனாவுக்காக வீட்டை விட்டு வெளியேறிய ஹேமந்த், மதம் மாறி சனாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில காலம் ராஜஸ்தானில் வாழ்ந்த நிலையில், சனா கானின் வேலை நிமித்தமாக சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் குடியேறியுள்ளார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இசை கலைஞரான ஹேமந்த், வீட்டிலேயே இசைப்பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்தார். சமீப காலமாகவே ஹேமந்திடம் இசை வகுப்புக்கு வரும் வேறு ஒரு பெண்ணுடன் ஹேமந்த் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இவர்களது காதல் சனாவிற்கு தெரிய வரவே இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்படத் தொடங்கியுள்ளது.

இது குறித்து சனா ஹேமந்திடம் கேட்டதில் இருந்து, சனாகானைக் கொடுமைப்படுத்தி, தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார் ஹேமந்த்.இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜூன் 22ம் தேதி இரவு சனா கான், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில், தனது கணவரின் தொடர்பு குறித்து தெரியப்படுத்திய சனாகான், அது குறித்து கேட்டதும், தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருவதாக, அவரது கொடுமைகளை எல்லாம் விவரித்தபடியே வீடியோவில் லைவ்வாக சென்று கொண்டிருந்த போதே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஐதராபாத்தில் வசிக்கும் சானாவின் வீட்டில் இருந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சனாவின் செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.