யாழில்..
யாழ்ப்பாணம் – அராலி,வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்றைய தினம்(29.06.2023) மதியம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.