ஔராங்கஸ்ரீ ஹின்ரிக்சன்..
வெளிநாடுகளில் இலங்கையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிய இலங்கை பெண் ஒருவருக்கு ஐரோப்பிய நாடான்று கௌரவம் வழங்கியுள்ளது.
ஐஸ்லாந்தின் தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் ஔராங்கஸ்ரீ ஹின்ரிக்சன் என்ற இலங்கை பெண் கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்கள் உயிரியல் பெற்றோரை கண்டுபிடிப்பதற்காக உதவியமைக்காக அவர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
துணிச்சலான பெண் என்ற அதீத கௌரவம் குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.