கட்டாரில் மர்மமான முறையில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞர்கள்.. தவிக்கும் குடும்பங்கள்!!

1099

கட்டாரில்..

மத்தியகிழக்கு நாடான கட்டாருக்கு வேலைக்காக சென்ற முல்லைத்தீவை சேர்ந்த இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக அதித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.



காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாட்களாக வேலைக்கு வராத காரணத்தால் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் விசுவமடு – இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது சிவகுமார் தர்சன் என்ற இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப வறுமை காரணமாக சிவகுமார் தர்சன் வேலைக்காக கட்டாருக்கு சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் உயிரிழந்த மற்றைய இளைஞர் தொடபில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தமது குடும்ப வறுமையை போக்க வெளிநாட்டுக்கு வேலைதேடிச்சென்ற இளைஞர்கள் உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.