
இலங்கை மீனவர்கள் 12 பேர் இந்திய கடற் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இரண்டு படகுகளில் சென்ற மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் சென்னை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும்போது அவர்களிடமிருந்த 750 கிலோ கிராம் மீன் இந்திய கடற் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை தமிழ்நாடு பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக இந்திய கடற் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





