வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை : 20 வயது இளம் பெண் உட்பட நால்வர் கைது!!

5335

வவுனியா ஏ9 வீதி மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த விருத்தினர் விடுதியில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியில் திடீர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும், போதைப்பொருள் பாவித்திருந்தமையுடன் பாலியல் தொழிலுக்கு உடந்தையாக செயற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் இரு ஆண்கள் என நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.



கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையுடன்,

குறித்த விருந்தினர் விடுதியில் பாலியல் தொழிலானது முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரியின் பின்னணியில் இயங்குகின்றமையும் பொலிஸார் விசாரணைகளின் வெளியாகியுள்ளன.