கோர விபத்தில் பரிதாபமாக பலியான இளம் தம்பதி!!

1289

குருநாகலில்..

குருநாகலில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து இன்றைய தினம் (06.07.2023) குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.



குறித்த விபத்தில் 34 வயதுடைய சி.பி அமில புஷ்பசிறி என்பவரும், 33 வயதுடைய அவரது மனைவி சதுராணி நிசன்சலா குமாரி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படகமுவ காப்புப் பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளம் தம்பதிகள் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் கட்டுவன மகிந்த கல்லூரியில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் தமது ஒரே மகளை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற போதே தம்பதியினர் இந்த விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

மேலும் விசாரனையில், மழை பெய்து கொண்டிருந்தபோது, வேகமாக வந்த லொறி, வேகக்கட்டுப்பட்டை இழந்து வீதியில் வந்த திசைக்கு திரும்பிய போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த புஷ்பசிறிகே இலங்கை கடற்படைக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.