எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மாணவர்கள் : மோடி பாராட்டு!!

658

Modi2

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த பள்ளி மாணவி மற்றும் மாணவரை பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் உள்ள சமூக நலப் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி பூர்ணா மற்றும் கம்மம் பகுதியில் உள்ள சமூக நலப் பள்ளியில் பயிலும் 17 வயது மாணவர் ஆனந்த் குமார் ஆகிய இருவரும் கடந்த மாதம் 25ம் கிததி தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினர்.

இதில் மாணவி பூர்ணா மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உலக சாதனையையும் படைத்தார். இந்நிலையில், அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மேலும் எவரெஸ்ட் சிகரத்தில் அவர்கள் மேற்கொண்ட பயணம் பற்றிக் கேட்டறிந்த பிரதமர் மோடி, அவர்களின் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

மாணவி பூர்ணாவின் குடும்பத்தினர் விவசாய பணியையும், மாணவர் ஆனந்த் குமாரின் தந்தை சைக்கிள் கடையும் வைத்துள்ளனர்.

சாதனை படைப்பதற்கு பொருளாதார பின்புலம் ஒரு தடையாக இருக்காது என்பதை தங்களின் சாதனை மூலம் உலகிற்கு உணர்த்தியிருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.