இத்தாலியில்..
இத்தாலியில் ஆற்றில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தையும் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியசென்ஸா மாகாணத்திலுள்ள ட்ரெபியா ஆற்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 59 மற்றும் 28 வயதுடைய, லெஸ்லி கிலாஸ்டர் திசேரா வர்ணகுலசூரிய மற்றும் துலாஜ் நிலஞ்சன் திசேரா வர்ணகுலசூரிய ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
ஆற்றில் குளிக்க சென்ற நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்ப விசாரணையின்படி, மகன் முதலில் நீரில் மூழ்கி சிரமப்பட்ட நிலையில்,
தந்தை அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளதாக அறியமுடிந்துள்ளது. எனினும் துரதிர்ஷ்டவசமாக, அந்த இடத்திற்கு உதவியாளர்கள் வந்தபோது, அவர்கள் ஏற்கனவே நீரில் மூழ்கிவிட்டனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.