பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கையர் உட்பட ஐவர் கைது!!

471

Arrest

மாநில மற்றும் சர்வதேசங்களுக்கிடையில் பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தல் ஈடுபட்ட கும்பலொன்றை பஞ்சாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் மூலம் சுமார் 23 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு இலங்கையர் உட்பட வந்த ஐந்து முக்கிய சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பஞ்சாப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் சர்வதேச சந்தைப் பெறுமதி 115 கோடி ரூபா என காவல்துறை மா அதிபர் கௌரவ் யாதேவ் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கிய போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் வெளி மாநிலங்களுக்கு காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போதைப் பொருள் வர்த்தர்களிடமிருந்து 76 லட்சம் இந்திய ரூபாவும், ஆயுதங்கள், வெடி பொருட்கள், கார், மற்றும் பாகிஸ்தான் செல்போன் சிம்கார்ட் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பஞ்சாப் பொலிஸார் கடந்த ஆண்டு, 6 ஆயிரம் கோடி மதிப்புள்ள மருந்துகளை அழித்துள்ளதுடன், இது தொடர்பில் சுமார் 50 பேரையும் கைது செய்திருந்தனர்.