மீண்டும் இராணுவ வேடத்தில் வந்து 20 பெண்களை கடத்திய நைஜீரிய தீவிரவாதிகள்!!

929

Nigeria

நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு எழுதி வந்த 300 மாணவிகளை போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு கடத்தி சென்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்களது இயக்கத்தை சேர்ந்த தோழர்களை (தீவிரவாதிகளை) உடனடியாக விடுவிக்கவில்லை என்றால் மாணவிகளை விடுதலை செய்ய முடியாது என தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும் அந்த சிறுமிகளை விபச்சார சந்தையில் விற்கப்போவதாய் அவர் வெளியிட்ட தகவல் சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை தந்தது.

இதனையடுத்து கடந்த 7ம் திகதி போர்னோ மாநிலத்தில் உள்ள ஹார்கின் புளுலானி கிராமத்திற்குள் இராணுவ உடையுடன் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் 20 பெண்களை மிரட்டி, அவர்களை ஊர்தி ஒன்றில் ஏற்றி சென்று தப்பி ஓடியுள்ளனர்.

தற்போது கடத்தப்பட்ட பெண்களை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.