மீண்டும் கராச்சி விமான நிலையத்தில் தாக்குதல் : விமானப் போக்குவரத்து ரத்து!!

551

PAK ATTACK

பாகிஸ்தான் கராச்சி விமான நிலைய வளாகத்தில் உள்ள பாதுகாப்பு படை விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று முன்தினம் கராச்சி விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுமார் 29 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் தற்போது கராச்சி விமான நிலைய பாதுகாப்பு படை விடுதி மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத் தாக்குதலையடுத்து தீவிரவாதிகள்-பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

தீவிரவாதிகள் பதுங்கியுள்ள கட்டிடம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை தாக்குதல் சம்பவத்தை அடுத்து கராச்சி நகருக்கான விமானப் போக்குவரத்துக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக இலங்கையில் இருந்து கராச்சி நகருக்கு செல்லும் விமானங்கள் நேற்றைய தினம் ரத்துச் செய்யப்பட்டு, இன்று மீளவும் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையிலேயே மீண்டும் அங்கு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.