பேருந்துக்காக காத்திருந்த சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்த குழு!!

558

Ind abuse

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் இளைஞர்கள் மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

15 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் ஜுன் 6ம் திகதி பய்ரா கிராமத்திலிருந்து பாலிக்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்த போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அவர்களை வீட்டில் சென்று விடுவதாகக் கூறி சயலா என்ற இடத்தில் அவர்களை அழைத்துச் சென்று இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண்களின் சகோதரர் சதாதி பொலிசில் புகார் அளித்துள்ளார். பலாத்காரம் செய்த 3 பேரில் ஒருவர் மைனர் என்று பாதிக்கப்பட்ட சகோதரிகள் தெரிவித்தனர். இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.