யாழ். அச்சுவேலியில் மாணவி ஒருவரின் சடலம் மீட்பு!!

615

Body

யாழ். அச்சுவேலிப் பகுதி ஒன்றில் மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சடலம் அச்சுவேலி இடைக்காடுப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டது.
அப் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் புவிதா (20) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு வந்தவர், பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்.உடுவில் – மானிப்பாய் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்றுப் புதன்கிழமை மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் ஜெனித்தன் (30) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.