
மீரிகம, பஸ்யால பிரதேசத்தில் பொலிஸ் சோதனையின்போது மோட்டார் வண்டியை நிறுத்தாது சென்ற இளைஞன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவ் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பஸ்யால பிரதேசத்தில் தனது கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாரால் மோட்டார் வண்டியில் சென்ற இளைஞன் மறிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது வண்டியை நிறுத்தாது சென்ற இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இளைஞன் 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் வதுபிடிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





