கணவன் – மனைவி முரண்பாட்டையடுத்து நேர்ந்த கொடூரம் : தாயார் வழங்கியுள்ள வாக்குமூலம்!!

1820

நுவரெலியாவில்..

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கண்டி பிரதான வீதிக்கு அருகில் இலக்கம் ஐந்து டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு (07.08.2023) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இருவரும் கணவன் மனைவி எனவும், திருமணமாகி எட்டே மாதங்களான எண்டன் தாஸ் மற்றும் நாதன் ரீட்டா ஆகியோரே இந்த சம்பவத்தில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து கணவனால் மனைவி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை தொடர்ந்து கணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக என்டன்தாஸின் தாயார் வழங்கியுள்ள வாக்குமூலத்தில், “நான் எனது மகன் மற்றும் மருமகளுடன் தனியான வீட்டில் வசித்து வந்தேன். வழமை போல திங்கட்கிழமை இரவு எனது மகனுக்கும் மருமகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது.

நான் சமையல் அறைக்குள் சென்று பார்த்தபோது மருமகள் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார். மகனிடன் ஏன் என கேட்டப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடக்கின்றாள் யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறினார்.

நான் அயலவர்களை கூப்பிடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே வரும்போது மீண்டும் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது. வீட்டினுள் சென்று பார்த்தால் மகனும் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து காணப்பட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும், நீதவான் விசாரணைக்கு பிறகு உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் கூறியுள்ளனர்.

நுவரெலியாவில் குடும்பத் தகராறு காரணமாக கணவரொருவர், மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த சம்பவம் டோப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (07.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தின் போது இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கணவர் பயன்படுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நுவரெலியா, டோப்பாஸை வசிப்பிடமாகக் கொண்ட 28 மற்றும் 26 வயதுடைய தம்பதியினரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.