150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி சண்டையிட்ட காதலர்கள்!!

745

சத்தீஸ்கரில்..

சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரா பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.



சில நாட்களில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலனின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த காதலி ஆத்திரத்தில் அருகில் இருந்த 150 உயர மின் கோபுரத்தில் ஏறிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் மின்கோபுரத்தில் காதலியின் பின்னாலேயே ஏறினார். அப்போது தனது காதலி எந்த விபரீத முடிவும் எடுத்து விடக்கூடாது என அவரிடம் பேசிக் கொண்டே பின்னாலேயே சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 150 அடி உயர மின்கோபுரத்தில் காதல் ஜோடிகள் இருவரும் சண்டை போட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உங்களுக்கு சண்டை போடுவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா என காவல்துறையினர் வசை பாடினர். பின்னர் இருவரையும் கீழே இறங்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

அரை மணி நேரமாக காதல் ஜோடிகள் மின் கோபுரத்திலிருந்து கீழே இறங்கவே இல்லை. அதன் பிறகு கீழே இறங்கினர். இதில் காதலன் கீழே இறங்கியதும் காதலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காதலியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.