விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட குழப்பநிலை!!

1836

வாதுவவில்..

வாதுவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.நேற்று பிற்பகல் ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் சிலர், குறித்த நபரை தாக்கியதாக தெரியவந்துள்ளது.



தல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த 19 வயதுடைய இளைஞரின் இறுதிக்கிரியைகள் நேற்று வெரகம பொது மயானத்தில் இடம்பெற்றது.

அங்கு சுமார் 50 மோட்டார் சைக்கிள்களில் ஆர்பாட்டமாக வந்து இறந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் போவதாக கூறி ஆபத்தான சாகச செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

பலர் அதை கோபத்துடன் பார்த்த போதிலும் அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அங்கு வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த தந்தையை, ஏறக்குறைய 30 இளைஞர்கள் கொண்ட குழு ஹெல்மெட்களால் தாக்கியதுடன் எட்டி உதைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.பின்னர் அங்கு வந்த பலர் அவரை தீவிர முயற்சியின் பின்னர் காப்பாற்றிய நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.