பஞ்சாப்பில்..
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் முச்சல் கிராமத்தில் பெற்றோர், மனைவி மற்றும் 5 குழந்தைகளோடு வசித்து வருபவர் பாவ். இவர் சீக்கியர்களின் நிஹாங் பிரிவைச் சேர்ந்தவர்.
4 மகள், ஒரு மகன் என 5 வாரிசுகளை உடைய பாவின் குடும்பத்தில், 3வது மகளை காணவில்லை. வீட்டில் தகவல் எதுவும் தெரிவிக்காமல் அந்த 16 வயது பெண் வெளியே சென்றதில் தந்தை பாவ் கோபம் அடைந்தார். வியாழக்கிழமை அந்த பெண் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
வந்ததும் ஏன் சொல்லிவிட்டு போகவில்லை எங்கே சென்றுவந்தாய்? என பலக் கேள்விகளை எழுப்பினார். மகள் அமைதியாக இருந்தார் எந்த பதிலும் சொல்லவில்லை.
உடனே ஆத்திரத்தில் கைவசமிருந்த கூர்மையான ஆயுதத்தால் மகளை ஆத்திரம் தீரக் குத்திக் கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து குடும்பத்தில் எவரேனும் வெளியே கூறினால் அவர்களுக்கும் இதே கதி தான் என மிரட்டல் விடுத்தார். மகளின் சடலத்தை பைக்கில் கட்டி தரதரவென சுமார் அரை கிமீ தொலைவுக்கு கிராமத்தின் சாலைகளில் உயிரிழந்த மகளை இழுத்து சென்றார்.
கடைசியில் ஊர் எல்லையில் இருந்த தண்டவாளத்தில் மகள் சடலத்தை வீசிவிட்டு தலைமறைவாகி விட்டார். குடும்பத்தினர் அச்சத்தில் வாய் மூடியிருந்த போதும், ஊருக்குள் நேரில் பார்த்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் பாவ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெற்ற மகளை கொன்று விட்டு தலைமறைவாக இருக்கும் இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.