அமெரிக்காவில் கற்கும் இலங்கை மாணவியின் நெகிழ்ச்சியான செயல்!!

994

பண்டாரவளையில்..

பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள 5 பாடசாலைகளுக்கு, அமெரிக்க பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவி ஒருவர் மடிக்கணினி மற்றும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.



இலங்கை மாணவர்கள் பொருளாதாரச் சிரமங்களினால் கல்விச் செயற்பாடுகளில் எவ்வாறு நெருக்கடிகளை சந்திக்கின்றார் என்பதை ஊடகங்கள் ஊடாகப் பார்த்த பின்னரே தாம் இதற்கான முயற்சியை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பண்டாரவளையில் உள்ள 5 பாடசாலைகளுக்கு 10 லட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்களை அவர் வழங்கியுள்ளார்.

அமெரிக்க பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவியான 17 வயதான செனுலி பீரிஸ் என்பவரே இந்த அன்பளிப்பை வழங்கியுள்ளார்.பாடப் போட்டியில் முதலிடம் பெற்றதன் மூலம் பெற்ற 5 லட்சம் ரூபாவும், அமெரிக்க மாணவி ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மேலும் 5 லட்சம் ரூபாவும் சேர்த்து இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.