ஜனாதிபதிக்கு பொலிவியாவில் அதி உயர் விருது!!

639

S

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பொலிவியாவின் அதி உயர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

ஜீ.77 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிவியா செல்லும் ஜனாதிபதிக்கு அந்த நாட்டின் ஜனாதிபதியினால் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

பொலிவியாவின் ஜனநாயக விருதான இது சமதானத்துக்கும் ஜனநாயகத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளது.

இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கு வருகைதரும் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.