இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுதலை!!

966

Fisher

சென்னை, புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்கள் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே, ஆந்திர கடலோரத்தில் கடந்த 7ம் திகதி அத்துமீறி மீன் பிடித்த 12 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதனை அடுத்து புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அரசு உத்தரவின்படி நேற்று இரவு அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 51 பேர் நேற்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தரவின்படி விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.