
பதினைந்து வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதான கொஸ்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் சிறுமியின் மாமாவான 37 வயதுடைய நபரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மற்றைய சந்தேகநபர் 24 வயதுடையவர்.
தங்கொட்டுவ – லிகிரியாகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அவரை பிரிந்து சென்றுள்ள நிலையில் அவர் சிறுவர் இல்லமொன்றில் வசித்து வந்துள்ளார்.
எவ்வாறாயினும் சிறுமி விடுமுறைக்காக தனது பெரியம்மாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். சிறுமியின் பெரியம்மா வெளியில் சென்றவேளை சந்தேகநபர்கள் இருவரும் சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னதாக சம்பவம் தொடர்பில் அறிந்த சிறுமியின் பெரியம்மா கொஸ்வத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த நம்பவம் தொடர்பில் கொஸ்வத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.





