வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் தாக்குதல் : இரு பிள்ளைகளின் தந்தை பலி – சந்தேகநபர் கைது!!

6752

வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூந்தோட்டம் சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று முன்தினம் (18.08) குறித்த நபர் மீது (உயிரிழந்த நபர்) மீது அங்கிருந்த இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (20.08) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



இச் சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய தங்கராசா பிரதீபன் என்ற நபர் உயிரிழந்துள்ளமையுடன் பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த 32வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் சிசிரிவி உதவியுடன் மற்றைய சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையுடன் உயிரிழந்த நபரின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.