விற்றுத் தீர்ந்த 2015 உலகக்கிண்ண இந்தியா- பாகிஸ்தான் போட்டி டிக்கெட்!!

460

Ind

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 2015 ஆம் ஆண்டு நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் என்றாலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

2015ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்ஸ்டு ஓவல் மைதானத்தில் பெப்ரவரி 15ம் திகதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக போட்டி நிர்வாகிகளில் ஒருவரான ஜோன் ஹார்ன்டென் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், அவுஸ்திரேலியாவில் பல்வேறு மக்கள் வசிக்கின்றனர்.

இவ்விரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள் இறுதிப்போட்டிகளை போல் இருப்பதால் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.