வவுனியா மாணவன் கொழும்பில் சடலமாக மீட்பு!!(2ம் இணைப்பு)

1383

Gobi

வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர், தெஹிவளை அல்விஸ் வீதியிலுள்ள நான்கு மாடிக் கட்டிடத்தின் கீழிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா வைரவப்புளியங்குளத்தைச் சேர்ந்த சந்திரகுமார் கோபி ஆனந்த் என்னும் இளைஞனே இவ்வாறு கட்டடத்திலிருந்து வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.

இவர், கணனி விஞ்ஞான துறையில் பயின்றுகொண்டிருப்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். நண்பர்களுடன் இரவு தூங்கிக் கொண்டிருந்த குறித்த இளைஞன் கட்டத்திலிருந்து கீழே வீழ்ந்ததால் மரணமடைந்துள்ளார்.