
கையில் பச்சை குத்திய பிரபுதேவா பெயரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து அழிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாம். பிரபு தேவாவை காதலித்த போது இந்த பச்சையை அவர் குத்தி இருந்தார். இடது கையில் பிரபு என்று பச்சை குத்தி வைத்து இருந்தார். பொது நிகழ்ச்சிகளில் அந்த பெயரை மறைக்காமலேயே கலந்து கொண்டார்.
சில படங்களிலும் பச்சை குத்தி இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிந்து மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பிரபு தேவா பெயரை பச்சை குத்தி இருந்த கையுடன் சினிமாவில் நடிப்பது அவருக்கு தொந்தரவாக இருக்கிறது.
மேக்கப் மூலம் அந்த பெயரை மறைக்கிறார். அல்லது நீண்ட கையுடன் ஜாக்கெட் அணிகிறார். நிரந்தரமாக பச்சை குத்தியதை அழிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார்.
இந்தி நடிகர் ரன்பீர் கபூரை தீபிகாபடுகோனே காதலித்த போது தனது கழுத்தில் ஆர்.கே. என அவரது பெயரை பச்சை குத்தி இருந்தார். இப்போது காதல் முறிந்துள்ளதால் ஆர்.கே. பெயரை தீபிகாபடுகோனே அழித்து விட்டார். லேசர் சிகிச்சை மூலம் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை செய்து அதை நீக்கியதாக கூறப்படுகிறது. அவர் வழியில் நயன்தாராவும் பிரபு தேவா பெயரை அழிக்கிறார்.





