தாயை தரதரவென இழுத்து செல்லும் இளைஞர்.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்.!!

1035

உத்தரபிரதேசத்தில்..

இந்த காலத்தில் யாரும் பெற்றோர்களை மதிப்பதே இல்லை. பாலூட்டி, சோறூட்டி வளர்த்த தாய் தந்தையரை கண்டு கொள்வதே இல்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பாக்பத் அருகேயுள்ள குஹார் கிஷன்பூர் பரால் கிராமத்தில் வசித்து வருபவர் .



தனது வயதான தாயை வீட்டில் வைத்து பராமரிக்காமல், தெருவில் தரதரவென இழுத்துச் சென்றார். அக்கம் பக்கத்தினர் அவரை தட்டிக் கேட்டனர். ஆனாலும் இந்த கேவலமான அடாத செயலை நிறுத்தாத இளைஞர் மேற்கொண்டு தாயை தெருவில் இழுத்துச் சென்றார்.

தன்னை விட்டு விடுமாறு அந்த தாய் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் தெருவில் அவர் தாயை இழுத்துச் சென்றார். ஊரின் கடைசியில் கொண்டு போய் தள்ளியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் தகவல் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது. விரிவான விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தாய்க்கு மகன் செய்த இந்த கொடுமை அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.