யாழ் போதனா வைத்தியசாலை சாதனை : ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சிசுக்கள்!!

1159

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பிறந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர்.

மேலும் மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.