யாழில் ஹெரோயினால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம்!!

1043

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞர் ஒருவர் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞர் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும், போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (28.08.2023) உயிரிழந்துள்ளார்.அதேவேளை இன்னுமொரு இளைஞரும் போதைக்கு அடிமையான நிலையில், உடலில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.