பிடிக்காத உணவைப் பார்த்தால் மனிதர்களைப் போல எலியும் புலம்புமாம்!!

551

T

பிடிக்காத உணவைப் பார்க்கும்போது புலம்பும் மனிதர்களைப் போன்று எலிகளும் புலம்பும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக் கழகத்தின் நரம்பியல் துறை பேராசிரியர் டேவிட் ரேடிஷ் மாணவர் அடம் ஸ்டேனருடன் இணைந்து, எலிகளின் குணங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.

அவர் கூறியதாவது எலியின் தலையில் உள்ள நரம்பு செல்களை கண்காணிப்பதற்காக வயர்கள் இணைக்கப்பட்டு எலிகளுக்கு, பல்வேறு வாசனை மற்றும் சுவை கொண்ட பல உணவுகள் வைக்கப்பட்டன. தனக்குப் பிடித்த உணவை தேர்ந்தெடுக்க, ஒவ்வொரு எலியும் ஏறக்குறைய 20 வினாடிகள் செலவிட்டது.

பிடிக்காத உணவை ஐந்து வினாடிகளில் கண்டுபிடித்தது. தன் முன் வைக்கப்பட்ட பிடிக்காத உணவை எலிகள் வெறித்தபடி பார்த்தபோது அவற்றின் நரம்பு செல்களின் இயக்கத்தை ஆராய்ந்தோம். அப்போது, அவற்றின் ஏமாற்றத்தை அறிய முடிந்தது. அவை புலம்புவது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.