IPL போட்டியில் பாலியல் தொந்தரவு அளித்ததாக பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா பரபரப்புப் புகார்!!

456

Preeti

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆண் நண்பர் மீது பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது ஐபிஎல் போட்டிகள். சமீபத்தில் நடந்து முடிந்து 7வது ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

இதில் உள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளராக நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும், அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் இருந்து வருகிறார்கள். இந்த அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

அப்போது தனக்கு நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு தந்ததாக ப்ரீத்தி ஜிந்தா மும்பையிலுள்ள மெரைன் டிரைவ் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.

புகாரையடுத்து நெஸ் வாடியா மீது இந்திய தண்டனை சட்டம் 354வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.