பிரித்தானியாவில் வெளிச்சத்தை பார்க்க முடியாத அரிய வகை நோய் ஒன்றினால் 6 வயது சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான்.
பிரித்தானியாவின் எசக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஹரி பியர்ட்செல் (6) என்ற சிறுவன் சிஸ்டினோசிஸ் (Cytinocis) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இதனால் இந்த சிறுவனால் வெளிச்சத்தை பார்க்க முடியாது, இதன் காரணமாக எப்போதும் கண்ணாடி அணிந்து தன் கண்களை காத்துவருகிறான்.
இதுகுறித்து இச்சிறுவனின் தயார் கூறுகையில், எனது மகன் இந்த கண்ணாடியை எப்போதுமே அணிந்திருப்பான், மேலும் அவன் வெப்பகாலங்களில் கஷ்டப்படுவதால் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு 13 வகையான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறான் என கவலையோடு கூறியுள்ளார்.
2 மில்லியன் குழந்தைகளில் ஒரு குழந்தையே இந்த வகை நோயால் பாதிக்கப்படும், பிரித்தானியாவில் இதுவரை 150 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.








