சிம்புக்கு கஞ்சத்தனம், ரவிக்கு தாராளம் காட்டும் ஹன்சிகாவின் பாரபட்சம்!!

790

hansiak

சிம்பு படத்தில் ஆர்வம் காட்டாத ஹன்சிகா ஜெயம் ரவி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இதுபற்றி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான்.

வாலு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. அப்போது ஏற்பட்ட பழக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு வேகமாக நடந்தது. சிம்புவுடன் ஹன்சிகாவுக்கு காதலும் மலர்ந்தது. இதற்கு ஹன்சிகாவின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார்.

அம்மாவின் பிரஷர் அதிகரிக்கவே சிம்புவுடனான காதலை முறித்தார் ஹன்சிகா. வாலு படப்பிடிப்புக்குப் போவதிலும் தயக்கம் காட்டினார்.

விவகாரம் பஞ்சாயத்து வரை சென்றது. சமரசத்துக்கு பின் ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்து கொடுக்க ஹன்சிகா ஒப்புக்கொண்டிருக்கிறார். வருடக் கணக்கில் படப்பிடிப்பு நடந்தும் முடியாமல் இருந்த வாலு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதுகுறித்து சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில், வாலு இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டுத் திகதி லவ் ஆன்தம் இசை ஆல்பம், புதிய பட அறிவிப்பு என இரசிகர்களுக்கு இனிமையான செய்திகள் அடுத்தடுத்து காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார் ஹன்சிகா. இதன் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக கலந்துகொள்ளும் ஹன்சிகாவின் ஒத்துழைப்பால் சத்தமில்லாமல் இப்படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. 3வது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

பிஸியான நேரத்திலும், தனது படத்தில் அக்கறை காட்டும் ஹன்சிகாவின் ஒத்துழைப்பு தயாரிப்பாளரையும் இயக்குனரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளதாம்.