3 வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவை தாக்கி பொலிஸில் ஒப்படைத்த தாய்!!

885

child abuse

மூன்று வயது பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பௌத்த பிக்குவை குழந்தையின் தாய் கடுமையாக தாக்கிய பின்னர் பொலிஸில் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் எகலியகொட என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் கைது செய்த பிக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, பிக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மூன்று வயதான குழந்தை தனது அம்மம்மாவுடன் விகாரைக்கு தானம் கொடுக்க சென்றிருந்த சந்தர்ப்பத்தில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குழந்தையை பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதை குழந்தையின் அம்மம்மா கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதான பிக்கு எகலியகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

அவிசாவளை நீதவானின் உத்தரவிற்கு அமைய பாதிக்கப்பட்ட குழந்தை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.