ஆப்கானிஸ்தானில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த 11 பேரின் கைவிரல்களை தலீபான் தீவிரவாதிகள் வெட்டியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தல் நடந்தது.அதில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்காததால், நேற்று முன் தினம் மீண்டும் தேர்தல் நடந்துள்ளது.
தேர்தலில் பொதுமக்கள் தலீபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தபோதும் அதை மீறி பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததால் அவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து ஹீராத் மாகாணத்தின் கிராமம் ஒன்றில் வாக்களித்த 11 முதியவர்களை பிடித்து சென்ற தலீபான் தீவிரவாதிகள், எங்களது அனுமதியில்லாமல் எவ்வாறு நீங்கள் வாக்களிக்கலாம் என அவர்களை கடிந்துரைத்துள்ளனர்.
மேலும் வாக்களித்ததற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டிருந்த அவர்களது கைவிரல்களை வெட்டி துண்டித்துள்ளனர். இதனால் வலியில் துடித்த முதியவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விடயத்தை அந்நாட்டின் உள்துறை துணை அமைச்சர் ஆயூப் சலாங்கி தெரிவித்துள்ளார்.








