சித்திரத்தில் வரையப்பட்ட இளவரசி நேரில் வந்த அதிசயம்!!

641

அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஒருவர் தான் பிரபல கேலிசித்திரம் ப்ராசன் படத்தில் வரும் இளவரசி எல்சாவை போல் உள்ளதாக கூறி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ப்லொரிடா நகரை சேர்ந்த அன்னா ஃபைத் கால்சன் (18) என்பவர், தான் ப்ராசன் திரைப்படத்தில் வரும் இளவரசி எல்சாவை போல் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தனது புகைப்படத்தை இளவரசி எல்சா கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அதில் நடித்ததாகவே உணர்வதாகவும், இந்த புகைப்படத்தினால் கிடைத்த பெருமை மூலமாக எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இவரது சகோதரி படத்தில் வரும் இளவரசியின் தங்கை அன்னா போல் ஆடைகள் அணிந்து சிறு குழந்தைகள் மற்றும் புற்று நோயாளிகளை மகிழ்வித்து வருகின்றனர். இவ்வாறு குழந்தைகளுக்காக நடித்து அவர்கள் முகத்தில் சிரிப்பை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

A1 A2 A3 A4