விமானத்தில் கூச்சலிட்ட பயணியால் தரையிறங்கிய விமானம்!!

640

Flight

அமெரிக்காவின் ஜெட்பூளூ விமானத்தில் பயணி ஒருவர் திடீரென கோபமடைந்து கூச்சலிட்டதால் விமானம் தரையிரக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து லாஸ் வீகாஸ் நகருக்கு புறப்பட்ட விமானம் பயணியின் குழப்பத்தினால் டெட்ராய்ட் நகரில் தரையிரக்கப்பட்டது.

விமானம் காலை 6.40 மணிக்கு புற்பட்ட அடுத்த அரை மணி நேரத்தில் பயணி ஒருவர் தனது, குடும்பத்தினரிடம் கூச்சலிட்டுள்ளார். பின்னர் அவரை சமாதானம் செய்த விமான ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து அவரின் கைகளை கட்டப்பட்டு வைத்திருந்த நிலையில், விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிரக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குடும்பத்தினர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், குடும்பத்தினரை வெட்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவருக்கு மன உளைச்சல் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.