ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்!!(வீடியோ)

462

Preethi

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகார் தொடர்பாக 2 பேரின் வாக்குமூலத்தை மும்பை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீதான ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகார் தொடர்பாக, கடந்த மே 30ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் கார்வாரே பவிலியனில் இருந்த 2 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக ப்ரீத்தியிடமும் விசாரிக்க புலனாய்வு அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால் அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதால் விசாரிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
நெஸ்வாடியா மீது ப்ரீத்தி ஜிந்தா மும்பை பொலிஸில் வியாழக்கிழமை இரவு புகார் அளித்துள்ளார்.

அதில் மே மாதம் 30ம் திகதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடந்தபோது, பெவிலியனில் வைத்து தன்னிடம் நெஸ்வாடியா தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தொழிலதிபர் நெஸ்வாடியா, ப்ரீத்தி ஜிந்தா இருவருமே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் ஆவர். மேலும் 5 ஆண்டுகளாக காதலர்களாக இருந்த இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ப்ரீத்தி புகாரின் அடிப்படையில் மும்பை மரைன் டிரைவ் பொலிஸார், நெஸ்வாடியா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே சம்பவ தினத்தன்று ப்ரீத்தி பெவிலியனில் முன் வரிசையிலும், நெஸ்வாடியா 6 வரிசைகள் தள்ளி பின் வரிசையிலும் அமர்ந்திருந்தது காணொளியில் பதிவாகி உள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.