தப்பு தப்பாய் பேசிய மோடி : டிவிட்டரில் தூள் பறக்கும் கிண்டல்!!

588

PM Modi in Thiphu

பூடான் நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோடி பேச்சில் செய்த தவறை டுவிட்டர் தளத்தில் ஏராளமானோர் வெவ்வேறு விதமாக விமர்சித்துள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவிற்கு பிறகு, முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக பூடானிற்கு சென்றுள்ளார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் பூடான் என்று கூறுவதற்கு பதில் வாய் தவறி நேபாள் என கூறியுள்ளார்.

இவரது இந்த பேச்சிற்கு டுவிட்டர் தளத்தில் மிகுந்தளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விமர்சகர்கள் கூறியதாவது, பிரதமர் மோடி பூடானை நேபாள் என்று கூறியதால் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்ன ஒரு மாபெரும் தவறு என்று மிஹிர் பாத்யே என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு மனிதன் என்பவன் தவறுகள் புரிவது சகஜம். வாய்த்தவறி மோடி அவ்வாறு கூறியதாக வசந்த் ஷெட்டி என்ற நபர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து டிம் மோடி உரை, நேபாள், லடாக்கை போட்டு குழப்பியது என அவர் கூறியவற்றை மொத்தமாக சேர்த்து பூடான் ஜனநாயக நாடானதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என சூர்யநாராயண் கணேஷ் என்பவர் கூறியுள்ளார்.

மேலும் மோடியை புவியியலை நன்கு கற்குமாறு அபினவ் சர்மா என்ற நபரும், ஒருவேளை குஜராத்தியில் பூடானை நேபாள் என்பார்களோ? என ப்ரம்பி என்பவரும் கிண்டலடித்துள்ளனர்.