106 ஓட்டங்களுடன் சுருண்ட இந்திய அணிக்கு போட்டியாக 58 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து 47 ஓட்டங்களால் தோல்வியடைந்த பங்களாதேஷ்!!

423

D

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா, வங்கதேச அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய உத்தப்பா, ரஹானே வங்கதேச அணி வீரர்களின் பந்து வீச்சில் திணறினர். மழை அடிக்கடி குறிக்கிட்டதால் போட்டி 41 ஓட்டங்களாக குறைக்கப்பட்டது.

அதற்கடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். அதிகபட்சமாக ரெய்னா 27 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். 25.3 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

106 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு பதிலடி கொடுத்தது இந்தியா. மொகித் ஷர்மாவும், பின்னியும் விக்கெட் வேட்டையில் களமிறங்க இருவரும் போட்டி போட்டு வங்கதேச அணியை வீழ்த்தினர்.

மொகித் 4 விக்கெட்டுகளையும், பின்னி 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் வங்கதேச அணி 17.4 ஓவர்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 58 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியது. 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய பின்னி ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.