91 பந்துகளில் 295 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த இலங்கை வீரர்!!

437

SL

அயர்லாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இலங்கையை சேர்ந்த ரோய் சில்வா என்ற வீரர் 91 பந்துகளில் 295 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

அயர்லாந்து நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கிலெண்டர்மோத் – கிலிப்டோன்வில் அணிகள் மோதின. இந்த போட்டியானது 40 ஓவரை கொண்டதாகும்.

இந்தப் போட்டியில் அதிரடியில் கலக்கிய சில்வா 11 நான்கு ஓட்டங்கள், 34 ஆறு ஓட்டங்கள் உட்பட 248 ஓட்டங்களை குவித்தார். இதில் 248 ஓட்டங்களை இவர் ஆறு மற்றும் நான்கு ஓட்டங்கள் வாயிலாக எடுத்துள்ளார்.

இவரது அணியானது 40 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 462 ஓட்டங்கள் குவித்தது. இவர் தனது சதத்தை 27 பந்துகளில் எட்டிய அவர் அடுத்த 64 பந்துகளில் 195 ஓட்டங்களை குவித்தார்.

இந்த போட்டிக்கு பிறகு பேட்டியளித்த சில்வா, தான் 13 ஆண்டுகளாக முதல் தரப்போட்டிகளில் விளையாடுவதாகவும், கடந்த ஆண்டு வரை கொழும்பு கிளப் கிரிக்கெட்டுக்காக ஆடியதாகவும் தெரிவித்துள்ளார்.