அனுஷ்காவிடமிருந்து இலியானாவிற்கு தாவிய விராத் கோஹ்லி!!

446

Kholi

விராத் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வரும் நிலையில், இலியானாவுடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்திய அணியின் இளம் வீரராக கலக்கி வருபவர் கோஹ்லி. இவர் அனுஷ்கா ஷர்மாவுடன் நெருக்கமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

மேலும் இந்திய அணி நியுசிலாந்து சென்ற போது தன் கூடவே அனுஷ்காவையும் அழைத்து சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் கூட வெகுவாக இணையத்தளத்தில் பரவியது.

ஐ.பி.எல் தொடக்க விழாவில் கூட ஷாரூக்கான் நடத்திய சுயம்வரம் விளையாட்டில் கோஹ்லி, அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படத்தை தெரிவு செய்து இருவரும் இடையே உள்ள காதலை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் கோஹ்லி, ஒரு ஷம்பு விளம்பரப் படத்தில் நடிகை இலியானாவுடன் நடித்துள்ளார். அச்சமயம் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதே ஷம்பு விளம்பரத்தில் நடித்த போது தான் அனுஷ்காவுடன், கோஹ்லிக்கு நெருக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.