
மலேசியன் ஏயார்லைன்ஸ் விமானம் MH370 விபத்துக்குள்ளானதாக கருதப்படும் தளத்தை இன்னும் எவரும் தேடவில்லை என பிரித்தானியா துணைக்கோள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்னனு சிக்னல்களை வைத்து மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என INMARAST துணைக்கோள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் பயணித்த பாதையை வைத்து அந்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த இடத்தை இதுவரை எவரும் தேடவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த இடத்தை கப்பல் நெருங்கியதாகவும், ஆனால் வேறு சிக்னல் கிடைத்ததால் இதனை விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து INMARSAT விஞ்ஞானி கிரிஸ் ஆஸ்டன் கூறுகையில், அதிர்வெண் மற்றும் நேர அளவீடுகள் வைத்து இந்த இடத்தை கண்டுபிடித்ததாகவும், இந்த இடத்தில் தேடினால் கிடைக்க கூடும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.





