பேஸ்புக் மூலம் தந்தையின் உயிரைக் காப்பாற்றிய புத்திசாலி சிறுமி!!

545

Girl

அமெரிக்காவில் சிறுமி ஒருவர் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற கூறி பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளிட்டதால், அவரின் தந்தை காப்பாற்றப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் விர்ஜினா நகரத்தில் வீசிய புயலினால் மரம் விழுந்ததில் அப்பகுதியை சேர்ந்த்க ப்ரியானா (10) என்ற சிறுமியின் தந்தை க்ரிகோர் வேன்ஸ் படுகாயமடைந்துள்ளார்.

இந்த கடும் புயலினால் அந்நகரத்தின் சிக்னல் துண்டிக்கப்பட்டதுடன், அவசர ஊர்தியையும் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

அப்போது பேஸ்புக்கில் வலைத்தளத்தில், என் தந்தை அபாயகரமான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார் என்றும் யாரேனும் 911 என்ற எண்னை தொடர்பு கொண்டு அவசர ஊர்தியை வரவைத்து என் தந்தையை காப்பாற்ற உதவுங்கள் எனவும் அழுது கொண்டே பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர ஊர்தியில் சிறுமியின் தந்தை ஏற்றபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் தந்தை நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அவசர ஊர்தியை அழைக்க முடியாமல் தவித்த குடும்பத்தினர் மத்தியில், இந்த சிறுமி புத்திசாலித்தனமாக செயல்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் இவரை பாராட்டியுள்ளனர்.