8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவர்கள்!!

806

Abuse

உத்திரப்பிரதேசம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 சிறுவர்களை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலம் அருகே உள்ள அலகாபாத் என்ற ஊரில் 8 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவரது பள்ளியின் அதே பகுதியில் உள்ள உயர் பள்ளியில் பயிலும் இரு மாணவர்கள் சிறுமியை அருகில் உள்ள வயல்வெளிக்கு அழைத்து சென்று மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் இரத்தபோக்கு ஏற்பட்ட அந்த சிறுமி மயங்க நிலையில் இருந்துள்ளார்.அப்போது அவ்வழியே அவரது தந்தை தன் மகளை கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போயுள்ளார். இதனையடுத்து மகளை மீட்ட அவளது தந்தை பொலிசாரிடம் புகார் கொடுக்க சென்றபோது புகாரை ஏற்க பொலிசார் மறுத்துள்ளனர்.

இதன்பின் சுமார் 9 மணி நேரத்திற்கு பிறகு புகாரை ஏற்று தற்போது அந்த இரண்டு சிறுவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிர வேட்டை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் நிலை பரிதாபகரமாக உள்ளதாக கூறப்படுகிறது.