
இந்திய மொடல் அழகி மஷூம் சின்கா என்பவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் டெய்ட் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், யூன் 12ஆம் திகதி இருவருக்கும் மும்பையில் திருமணம் நடந்தது.
டெய்ட்டின் அவுஸ்திரேலிய நண்பர்கள் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர்.மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஷகீர் கான் மற்றும் யுவ்ராஜ் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இருவரும் பாரீஸில் இருந்தபோது ஷான் டெய்ட் தனது விருப்பத்தைத் தெரிவித்தார் என்று மஷூம் தெரிவித்துள்ளார்.





