பிரான்ஸை உலுக்கிய சிறுவனின் புகைப்படம்!!

515

பாரிஸில் ரோமா சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் அடையாளம் தெரியாத நபர்களால் மர்மமான முறையில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளான்.

டேரியஸ் என்ற அந்த சிறுவனும், அவனது பெற்றோரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக தான் அங்குள்ள ரோமா முகாமிற்கு குடிபெயயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் முகமூடி அணிந்த 20 மர்ம நபர்கள் அந்த சிறுவன் மீது திருட்டு பழி சுமத்தி, அவனை அவன் குடியிருப்பில் இருந்து இழுத்து வந்து கொடூரமாக தாக்கியதாக தெரியவந்துள்ளது. டேரியஸ் தாக்கப்பட்டு கிடந்ததை ரோமா குடியிருப்பில் உள்ள ஒருவர் தான் முதலில் பார்த்துள்ளார்.

அவர் கூறுகையில் நான் அவனை ஒரு கார் நிறுத்துமிடத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் தள்ளுவண்டியில், முகமெல்லாம் வீங்கிய நிலையில் பயங்கர காயத்துடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

மேலும், நான் அவன் அணிந்திருந்த சிவப்பு நிற உடையை வைத்தே அவனை அடையாளம் கண்டேன். பின்னர் அவனை நான் அங்கிருந்து கொண்டு சென்று முதலுதவி வண்டியை அழைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

அவன் உடல் நிலையை பற்றி பாரிஸ் மருத்துவர்கள் தெரிவிக்கையில், டேரியஸ் இன்னும் தீவிர கோமா நிலையில் இருப்பதாகவும், அவனது தலையில் பல மண்டை ஓட்டு எழும்புகள் பலத்த காயமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை கேள்விப்பட்ட அச்சிறுவனின் பெற்றோர் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஹோலண்டே, நம் குடியரசு தோன்றியதில் இருந்து இப்படி ஒரு மோசமான, சொல்லதகாத ஒரு நியாமற்ற தாக்குதலை கேள்விபட்டதில்லை என்றும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தாக்குதல் பிரான்ஸ் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகளையும், பல அதிர்வலைகளையும் ஏற்படுத்திவருகின்றது. மேலும், வழக்கறிஞர் ஒருவர் இந்த தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று விவரித்துள்ளார்.

France France2